ஆப்கான் வெடிகுண்டு தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 15 Jan, 2019 08:50 pm
afghan-terror-attack-4-dead-including-indian

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவு துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், இந்தியர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறைக்கு சொந்தமான பாதுகாப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகே நேற்று திடீரென, பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் அருகே இருந்த பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 100 பேருக்கும் மேல் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்கள் நான்கு பேர் என்றும், அதில் இந்தியர் ஒருவரும் இறந்ததாக உறுதிபட தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்தியர் இறந்ததை உறுதி செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அவரின் உடலை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் உறுதி அளித்துள்ளது. இதற்கு காரணமானவர்களை நீதிக்கு கொண்டு வரவும் ஆப்கான் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close