மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு... காரணம்?

  முத்துமாரி   | Last Modified : 07 Apr, 2018 03:49 pm

ஆசியாவின் தென்கிழக்கு நாடான மலேசியாவில் பாரிசன் நேஷனல் கூட்டணி கட்சி சார்பில் பிரதமராக நஜீப் ரசாக் இருந்து வருகிறார். அவர் நேற்று திடீரென, மலேசிய நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக ஏப்ரல் 7ம் தேதி கலைக்கப்படும் என அறிவித்தார். இதற்கு மலேசிய மன்னரும் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வழக்கமாக மலேசிய நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பை அந்நாட்டு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

மலேசிய பிரதமர் மீது ஏற்கனவே பல்வேறு புகார் இருப்பதால் எதிர்க்கட்சிகளின் சேர்ந்து கலைப்பதற்கு முன்னர், தாமாகவே கலைத்துவிடலாம் என்ற நோக்கில் பிரதமர் செயல்பட்டதாக பேசப்படுகிறது. ஏற்கனவே பிரதமரின் பாரிசன் நேஷனல் கூட்டணி கட்சிக்கும், எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் நிதி மோசடி செய்து அவரது தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளதாக பிரதமர் நஜிப் ராஜக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவரை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாகவே நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார் என பொதுமக்கள் மாற்று எதிர்க்கட்சி வட்டாரங்களிடையே கருத்து நிலவுகிறது.

மலேசியாவில் 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 505 மாகாண தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்த மக்கள் தொகை 3.12 கோடி. தேர்தலில் 1.49 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மலேசியாவில் மலாய் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கின்றனர். மலாய் முஸ்லிம்களை அடுத்து இந்தியர்கள், சீனர்கள் உள்ளனர். மலேசியாவில் வசிக்கும் 20 லட்சம் இந்தியர்களில் 11 லட்சம் பேர் வாக்குரிமைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகார் எழுந்துள்ளதால் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close