இந்தோனேஷியாவில் வெடித்த எரிமலை; அவசர நிலை பிரகடனம்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 06:12 pm
volcanic-eruption-causes-emergency-declared-in-indonesia

இந்தோனேசியாவின் சியவு தீவில், எரிமலை வெடித்து நெருப்புப் பிழம்புகள் சாலைகளுக்கு வந்துள்ளதால், அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் கரன்கெடங் எரிமலை, கடந்த நவம்பர் மாதம் முதல் வெடிக்கத் துவங்கியது. கடந்த சில தினங்களாக, நெருப்புப் பிழம்புகளை எரிமலை கக்கி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களுக்கும் செல்லும் சாலைகள் பிழம்புகளால் மூடப்பட்டன. இதனால், அந்த பகுதிகளுக்கு மீட்பு படையினர் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடல் மார்க்கமாகவே அந்த கிராமங்களை சென்றடைய வேண்டிய நிலையில், அந்நாட்டு அரசு  உள்ளது. தற்போது அந்த இரண்டு கிராமங்களுக்கும் புதிய வழியை உருவாக்க மீட்புப் படையினர் முயற்சித்து வருகின்றனர். அந்த பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close