190 முறை அதிர்ந்த பூமி...பீதியில் உறைந்த மக்கள்!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 09:45 pm
philippines-over-190-earthquakes-jolt-philippines-town

 பிலிப்ஃபைன்ஸின் ஜெனரல் லூனா நகரம் கடந்த இரண்டு நாள்களில் நிலநடுக்கம் மற்றும் அதற்கு பிந்தைய அதிர்வுகளால் 190 முறை குலுங்கியுள்ளது நகர மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

அந்நாட்டின்  சுரிகோடி மாகாணத்தில் அமைந்துள்ள லூனா நகரில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிட்டர் அளவுகோலில் 5.9 -ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின்  தொடர்ச்சியாக சனிக்கிழமை மட்டும் அங்கு 130 முறை நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் அந்த நகரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 -ஆக பதிவான இந்நில அதிர்வால் உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இருப்பினும், நிலநிடுக்கத்தின் எதிரொலியாக தொடர்ந்து 60 முறை நிலஅதிர்வு  ஏற்பட்டது.

இரண்டு நாட்களில் 190 முறை பூமி  அதிர்ந்துள்ளதால் லூனா நகர மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

newtm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close