டாக்கா :தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 56-ஆக அதிகரிப்பு!

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 08:12 am
56-people-died-in-fire-accident-at-dhaka

வங்கதேச தலைநகர் டாக்காவில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் சவுக்பஜார் பகுதியில் வேதிப்பொருள்கள் சேமிப்பு கிடங்கு உள்ளது. குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இக்கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் பல மணிநேரம் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி, அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்த 10 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தீயணைப்புத் துறையின் முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 56 -ஆக உயர்ந்துள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.நூறாண்டுகள் பழமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close