தென்கொரிய தலைநகரில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 08:32 am
prime-minister-narendra-modi-greets-members-of-the-indian-community-at-lotte-hotel-in-seoul

தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் சியோலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி தென்கொரியா சென்றுள்ளார். இன்று அதிகாலை தலைநகர் சியோல் சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள பிரபல ஹோட்டலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடியுடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்து கொண்டும் அவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இன்று, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான சியோல் விருது மோடிக்கு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close