தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது: மோடி

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 10:31 am
the-time-has-come-for-the-global-community-to-act-beyond-talks-at-this-moment-and-to-unite-and-fight-against-terrorism

தீவிரவாதத்துக்கு  எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர்  மூன்-ஜெய்யை இன்று சந்தித்தார். தலைநகர் சியோலில் உள்ள அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இரு நாடுகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது:
தென்கொரியாவுடனான இந்தியாவின் வளர்ந்துவரும் நட்புறவில் பாதுகாப்புத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. தென்கொரிய தொழில்நுட்பத்தில் தயாரான கே-9 வஜ்ரா பீரங்கி இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு சிறந்த உதாரணம்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு தமது கண்டனம் மற்றும் இரங்கலை தெரிவித்ததற்காக தென்கொரிய அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாதத்துக்கு கண்டன குரல்கள் எழுப்புவதை தாண்டி, அதற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலக நாடுகள் ஒருங்கிணைந்து தீவிரவாதத்துக்கு தக்க பதிலடி தர வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close