நேபாள அமைச்சர் உள்ளிட்ட 6 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 05:48 pm
6-including-nepal-tourism-minister-dead-in-chopper-crash

நேபாள நாட்டின் டப்லஜங் மாவட்டத்தில், இன்று ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரபீந்திர அதிகாரி உட்பட ஏழு பேர் பலியாகினர்.

நேபாளத்தின் முக்கிய அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. டப்லஜங் பகுதியில் ஹெலிகாப்டர் சென்றபோது, திடீரென விபத்துக்குள்ளானது.  அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் ரபீந்திர அதிகாரி, பிரதமர் அலுவலக இணைச்செயலாளர் ஆங் ஷிரிங் ஷெர்பா, நேபாள விமானத்துறையின் துணை இயக்குனர் பீரேந்திரியா ஷ்ரேஷ்தா, விமானத்துறை பொறியாளர் த்ரூபா தாஸ் போச்சிபயா ஆகியோர் ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது.

விமானத்தில் பயணித்த அனைவரும் இந்த சம்பவத்தில் பலியானதாக விமானத்துறை செய்தித் தொடர்பாளர் பிரதாப் பாபு திவாரி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close