தாய்லாந்து இளவரசியை தேர்தலில் நிறுத்திய எதிர்க்கட்சி கலைப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 07:32 am
thai-opposition-party-dissolved-after-nominating-princess-for-elections

தாய்லாந்து நாட்டின் இளவரசி உபோல் ரதானவை பிரதமர் வேட்பாளராக நிறுத்திய, எதிர்க்கட்சியை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் கலைத்து, அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தாய்லாந்து அரசு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் இறங்க கூடாது என்ற வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தநாட்டின் எதிர்க்கட்சி, இளவரசி உபோல்ரதானாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தியது. அறிவிக்கப்பட்ட உடனேயே நாட்டின் அரசர் மகா வஜிரலங்கோர்ன் இதற்கு கடும் கண்டனம் விடுத்தார். அரச குடும்பத்தினர் அரசியலில் பங்கெடுப்பது சரியில்லை என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவரது வேட்புமனுவை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

 இதை தொடர்ந்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உபோல்ரதானாவை  தேர்தலில்  நிறுத்திய எதிர்க்கட்சி தாய் ரக்ஷா சார்ட் கலைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பத்து வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்ஷின் ஆதரவு பெற்ற இந்த கட்சி, அரச குடும்பத்தைச் சேர்ந்தவரை பிரதமராக நிறுத்துவதன் மூலம், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்தது. ஆனால் தற்போது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்னர், தாய்லாந்து அரசு கலைக்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமலில் இருந்து வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close