இந்தோனேஷியா: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 04:17 pm
flash-floods-in-indonesia-s-papua-province-50-feared-dead

இந்தோனேஷியாவின் பப்புவா தீவுப் பகுதியில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 50 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்தோனேஷியாவின் பப்புவா தீவுப் பகுதியில், கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. பப்புவாவின் சென்டனி என்ற இடத்தில், மழை மற்றும் நிலச்சரிவால் 50 பேர் பலியாகி உள்ளதாகவும், 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ள நீர் புகுந்து பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

பேரிடர் மீட்புப் படை செய்தித்தொடர்பாளர் சுட்டோபோ புர்வோ நுக்ரோகோ பேசியபோது, "பலி எண்ணிக்கையும், வெள்ளத்தின் தாக்கமும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மீட்பு படையினர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட உட்பகுதிகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். நிலச்சரிவால் இந்த வெள்ளம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால், வெள்ளநீர் இப்போது வடிந்து வருகிறது" என்று கூறினார். 

பப்புவா நியூ கினியா தீவின் மேற்கு பகுதியில், இந்தோனேசியாவின் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close