இந்தோனேசியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 06:48 pm
indonesia-floods-death-toll-rises-to-79

இந்தோனேசியாவின் பப்புவா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 43 பேர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பப்புவா நியூ கினியா தீவில், இந்தோனேசியாவின் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. முக்கியமாக வெள்ளத்தால், பப்புவா பிராந்தியத்தின் தலைநகர் ஜெயபுரா கடுமையாக பாதிக்கப்பட்டது. 4778 பேர் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

350 வீடுகள், 100 கட்டிடங்கள், 3 பாலங்கள், 8 பள்ளிகள் உள்ளிட்டவை இந்த நிலச்சரிவுகளில் முற்றிலும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 14 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 50 பேர் பலியானதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 79 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 41 பேர் படுகாயமடைந்ததாகவும், 75 பேர் சிறிய காயங்களால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 பேர் மாயமானதாக கூறப்படும் நிலையில், முழு வீச்சில் மீட்புப் பணிகள் நடைபெறு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close