வடகொரியாவில் வரலாறு காணாத வறட்சி

  Newstm Desk   | Last Modified : 17 May, 2019 11:43 am
scarcity-in-north-korea

வடகொரியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதாக அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் இந்த ஆண்டு, பருவமழை சராசரியைவிட குறைவாக பெய்துள்ளது. இந்த மழை அளவு, கடந்த 1979 -இல் பெய்த மழை அளவைவிட குறைவாகும். அதாவது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு பருவமழை குறைவாக பெய்துள்ளது. எனவே, வடகொரியா கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட ஐ.நா. குழு, உணவுப் பொருள்களின் விளைச்சல் குறைந்துள்ளதால், வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close