ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் பலி, பலர் படுகாயம் !

  டேவிட்   | Last Modified : 28 May, 2019 11:56 am
japan-unknown-person-attacked-19-injured

ஜப்பான் நாட்டின் கவாசாகியில் அடையாளம் தெரியாத நபர் திடீரென நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் பொதுமக்கள் வழக்கம்போல் கூடியிருந்தனர்.  அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர் நபர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் குழந்தைகள் உள்பட பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close