ஆண்டுக்கு 4.5 லீட்டர் மதுபானம் குடிக்கும் இலங்கையர்கள்!

  Shanthini   | Last Modified : 24 Dec, 2017 09:59 pm


ஆசிய நாடுகளில் மதுபானம் அருந்துபவர்களின் எண்ணிக்கையில் இலங்கை 11வது இடத்தில் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, ஆண்டுக்கு சராசரியாக 4.5 லீட்டர் மதுபானத்தையே இலங்கையர்கள் அருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வடமாகாணத்திலேயே மதுபானம் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கையிலேயே மதுபான விற்பனையால் அதிக வருமானம் பெறும் மாகாணமாகவும் வடமாகாணம் உள்ளது.

மேலும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018ம் ஆண்டுக்கான இலங்கையின் நிதி நிலை அறிக்கையில், மதுபானத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், தென்கொரியா மது அருந்துபவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. தென்கொரியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு 10.9 லீட்டர் மதுவை அருந்துவதாக கூறப்படுகிறது. 

சுமார் 8.7 லீட்டர் மது உட்கொண்டு வியட்நாம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தாய்லாந்து, மங்கோலியா, சீனா முறையே 3ம், 4ம், 5ம், இடத்தில் உள்ளது.

இந்தியா ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 4.6 லீட்டர் மதுவையும், இலங்கை 4.5 லீட்டர் மதுவையும் உட்கொண்டு முறையே 10ம் 11ம் இடங்களில் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close