பிளாஸ்டிக் பாட்டில்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம்

  Shanthini   | Last Modified : 24 Dec, 2017 05:33 pm


கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களிடையே சேகரிக்கப்பட்ட வெற்றுப் பிளாஸ்டிக் பாட்டில்களால் 35 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. 

“ஆரோக்கியமான உளநலத்திற்கு மாசற்ற சுற்றுச் சூழல்“ எனும் கருத்தில் கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டி ஒன்றின் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு பகுதியை கொண்டு கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இருந்து, 40,000க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 4000 பாட்டில்களில் தயாரிக்கப்பட்ட இந்த கிறிஸ்மஸ் மரம் , மாவட்ட வைத்தியசாலையின் உளநல பிரிவுக்கு முன் வைக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close