ராணுவ முகாமுக்குள் நிர்வாணமாக புகுந்த இளைஞனால் பரபரப்பு!

  Shanthini   | Last Modified : 24 Dec, 2017 06:29 pm


வவுனியா மூன்று முறிப்பு ராணுவ முகாமுக்கு ஆடையின்றி நிர்வாணமாக புகுந்த இளைஞனால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள வவுனியா ராணுவ முகாம் ஒன்றுக்குள் நிர்வாணமாக இளைஞர் ஒருவர் புகுந்துள்ளார். அப்போது அவரை ராணுவத்தினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அத்துடன், அந்த இளைஞனுக்கு ராணுவத்தினர் உடையணிவித்து வவுனியா போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனினும் அவர் என்ன காரணத்திற்காக முகாமுக்குள் உள்நுழைந்தார்? எவ்வாறு நுழைந்தார்? என்ற விசாரணைகளை வவுனியா போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். 18 வயதுடைய அவர் பெயர் நசீர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close