ஐ.நா அமைதி பணிக்கு இலங்கை ராணுவம்! மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு

  Shanthini   | Last Modified : 26 Dec, 2017 09:50 am


மாலி நாட்டில் அமைதியை கொண்டுவரும் நோக்கி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் படை செயல்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்புப் படையில் இலங்கை ராணுவ வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு வருடகாலத்துக்கு மாலியில் தங்கி அமைதி பணியில் ஈடுபட இருக்கும் வீரர்களின் முதல் குழு மாலி புறப்பட்டுச் சென்றது. 

இலங்கையின் 10வது படை பிரிவைச் சேர்ந்த 200 வீரர்களில் ஐ.நா பாதுகாப்புப் படையில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டள்ளனர். இவர்களில், 150 வீரர்களைக் கொண்ட முதல் குழு மாலிக்கு புறப்பட்டது. மீதம் உள்ள 50 வீரர்கள் விரைவில் மாலி செல்வார்கள் என்று இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐ.நா அமைதிகாக்கும் பணிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இலங்கை ராணுவத்தினர், ஹைதி பெண்கள் மற்றும் சிறுவர்களை கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கையில் நடந்த உள்நாட்டு இறுதிக்கட்டப் போரின் போதும் பாலியல் வன்கொடுமை, மனித உரிமை மீறல் போன்ற போர்க் குற்றங்களை இலங்கை ராணுவம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் ஐ.நா அமைதி காக்கும் படைப் பிரிவில் இலங்கை ராணுவத்தை சேர்க்கக் கூடாது என்று உலக அளவில் பல மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close