டி.டி.வி தினகரனை சந்தித்தார் எம்.பி சுமந்திரன்

  Shanthini   | Last Modified : 26 Dec, 2017 04:10 pm


“தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்தும் இருக்கும்” என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரியில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் கொழும்பு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் கிறிஸ்துமஸ் நிகழ்வில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக டி.டி.வி.தினகரனும் கலந்துகொண்டிருந்தார். 


இந்நிகழ்வில் உரையாற்றிய டி.டி.வி. தினகரன், “தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்தும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

கிருஸ்மஸ் நிகழ்வைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் சுமந்திரன் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு அரசியல் தீர்வுக்கு தாம் ஆதரவளிப்பதாக தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


'முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசின் ஆட்சியை விட தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி சிறந்தது தானே' என சட்டமனற உறுப்பினர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப்பதில் அளித்த சுமந்திரன், ஆட்சி பரவாயில்லை, ஆனால் தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார். 


மேலும், இலங்கையின் போர் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து டிடி தினகரனுக்கு விளக்கம் அளித்துள்ளதாக சுமத்திரன் இலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close