சர்வதேச நாடுகளை நம்பி எந்த பலனும் இல்லை - அனந்தி சசிதரன்

  Shanthini   | Last Modified : 26 Dec, 2017 11:08 pm


தமிழ் பேசும் மக்களுக்காக இனியும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்படப் போவதில்லை என்பதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 

மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதற்கு சர்வதேச அளவில் மிக மோசமான சூழல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹசைன், முதலாவது பதவிக் காலத்துடனேயே பணியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். 

“எதிர்வரும் 2018ம் ஆண்டே வெளியுறவுக் கொள்கை மூலம் நான் பெற்ற ஆணையின் இறுதிக் காலமாகும். இரண்டாவது முறையாகவும் மீண்டும் ஆணையாளர் பதவியில் நீடிக்கப் போவதில்லை.” என்று மனித உரிமைகள் ஆணையாளரினால் அவரது பணியாளர்களுக்கு 20.12.2017 அன்று அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் அறிக்கையின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். 

 அவரின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியினையும் ஏமாற்றத்தினையும் தந்துள்ளது.

“எதிர்வரும் 2018ம் ஆண்டே வெளியுறவுக் கொள்கை மூலம் நான் பெற்ற ஆணையின் இறுதிக் காலமாகும். இரண்டாவது முறையாகவும் மீண்டும் ஆணையாளர் பொறுப்பேற்கப் போவதில்லை.” என்பதனை, மனித உரிமைகள் ஆணையாளரினால் அவரது பணியாளர்களுக்கு 20.12.2017 அன்று அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் அறிக்கையின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

ஆணையாளரின் இந்நிலைப்பாடு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆகிய உலக மாமன்றங்களின் மீதான நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளது. வல்லாதிக்க நாடுகளின் தலையீட்டினால் சுதந்திரமாக செயற்பட முடியாமல் இருப்பதன் வெளிப்பாடாகவே அவருடைய அறிவிப்பு அமைந்துள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையையோ, சர்வதேசத்தையோ இனிமேலும் நாம் நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை. சர்வதேசத்தின் பிராந்திய நலன்களுக்கு ஒத்திசைவான போக்கில் செயற்பட்டு அரசியல், ராஜதந்திரம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் தன்னை பாதுகாப்பதிலேயே அதிக கவனம் செலுத்திவருகின்றது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் அறிவிப்பானது, நடைபெற்ற இனவழிப்புக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் கடப்பாட்டில் இருந்து  அரசாங்கம் வெகுவாக விலகிச்செல்வதை மேலும் ஊக்குவிப்பதாகவே அமைந்துவிடும் அபாயமேற்பட்டுள்ளது. அரசாங்கம் மட்டுமல்ல இனவழிப்பு போரிற்கு சகல வழிகளிலும் ஆதரவினை வழங்கிய சர்வதேச சமூகமும் தனது பொறுப்பில் இருந்து விலகிச் செல்வதன் அறிவிப்பாகவே ஆணையளரின் நிலைப்பாட்டினை பார்க்க வேண்டியுள்ளது என்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.