காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அரசு மவுனம்

  Shanthini   | Last Modified : 27 Dec, 2017 05:59 pm


காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகத்திற்கு விசாரணை அதிகாரிகளை நியமிப்பதாக ஜனாதிபதி அறிவித்து 2 வாரங்கள் கடந்துள்ளது. ஆனால் இதுவரையில் அந்த ஆணைக்குழு அலுவலகத்திற்கு எந்த அதிகாரியும் நியமிக்கப்படவில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் இறுதி யுத்தம் முடிவுற்ற போது ராணுவத்தினரின் அறிவுப்பிற்கு அமைய, பெற்றோர் தமது பிள்ளைகளை ராணுவத்திடம் ஒப்படைத்தனர். விசாரணையின் பின் விடுவிப்பதாக கூறி அவர்களை கைது செய்த ராணுவம் 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரையில் விடுவிக்கவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலையும் பெற்றோர்களுக்கு ராணுவமோ, அரசோ வழங்கவில்லை. 

இந்நிலையில், தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் அவர்களை உடன் மீட்டுத்தரும்படியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதே போல் வெளிநாட்டு பிரதிநிதிகளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து வருகின்றனர். ஆனாலும் இதுவரையில் அவர்களுக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் ஆணைக்குழு ஒன்றை அமைத்து விவாரணைகளை நடத்துவதாக அறிவித்த மைத்திரிபால சிறிசேன, அதை சட்டமாக கொண்டு வந்து நாடாளுமன்றில் நிறைவேற்றினார். ஆனால் அந்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பதவிக்கு 93பேர் விண்பத்துள்ள போதும் இதுவரையில் ஜனாதிபதியினால் எவரும் நியமிக்கப்படவில்லை.

ஐநாவின் விசாரணையில் இருந்து தப்பிக்கும் நோக்குடனே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டதாக முன்னர் விமர்சிக்கப்பட்டது. மேலும் ராணுவத்தரப்பில் இருந்தும் இந்த ஆணைக்குழுவுக்கு கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்தன. இந்நிலையில் குறித்த ஆணைக்குழுவுக்கு அதிகாரிகளை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ளாது ஜனாதிபதி காலம் தாழ்த்துவது சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close