இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கியது இந்தியா

  Shanthini   | Last Modified : 27 Dec, 2017 05:58 pm


இலங்கையின் 175 மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் தனது பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கான கல்வி உதவித்திட்டம் வழங்கவுள்ளது.

இந்திய அரசாங்கம், இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு நிதி உதவி, போர் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு வீட்டுத்திட்டங்கள், வீதி அபிவிருத்திகள், என பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. மேலும் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்தின் நட்புறவின் அடிப்படையில் கல்வி உதவித்திட்டங்களை இந்தியா வழங்கி வருகின்றது.

இதில் 2018 – 2019 கல்வி ஆண்டுக்காக, உயர்கல்வி அமைச்சகத்துடன் இணைந்து இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவித்திட்டங்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் 175 மாணவர்களுக்கு இந்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்புக்கான கல்வி உதவித் திட்டங்களை வழங்கவுள்ளது.

இதற்காக விண்ணப்பங்கள் வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி வரை ஏற்றுகொள்ளப்படவுள்ளன. இலங்கை இந்திய கலாச்சார நட்புறவு பேரவையின் கீழ் கல்வி உதவித்திட்டம்  வழங்கப்படவுள்ளன.

2018 – 2019 கல்வி ஆண்டுக்காக வழங்கப்படும் இந்த கல்வி உதவித்திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களால் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைகழங்கங்களில் பட்டப்படிப்பை தொடரமுடியும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கல்வி உதவித்திட்டத்தைப் பெறும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கான கட்டணம் ,மாதாந்த கொடுப்பனவு ,வருடாந்த நூல்கள் ஆகியவற்றுக்கான செலவுகளும் வழங்கப்படுவதுடன் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதிகளும் வழங்கப்படவுள்ளது.

மருத்துவ பட்டப்படிப்பு தவிர்ந்த விஞ்ஞானம், பொறியியல், வர்த்தகம், பொருளாதாரம், வணிகம், மனிதநேயம், கலை, கர்நாடகசங்கீதம், பரதநாட்டியம், ஓவியம் ஆகிய பட்டப்படிப்புக்களுக்காக நேரு நினைவு கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 100 பேருக்கு வழங்கப்படவுள்ளன.

விஞ்ஞானம், பொறியியல், வர்த்தகம், பொருளாதாரம், வணிகம் மனிதநேயம் மற்றும் கலை ஆகிய துறைகளில் முதுகலைப்பட்ட படிப்பை தொடர்வதற்காக மௌலானா அஸாத் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 50 பேர் பயன்பெறுவார்கள்.

ராஜீவ் காந்தி கல்வி உதவித்திட்டத்தின் கீழ், தகவல் தொழிநுட்பம் பிஈ பிடெக் [IT/ B.E/ B.Tech] ஆகிய துறைகளில் இளம்கலை பட்டப்படிப்பை தொடர்வதற்காக 25 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close