பிரசவகால தாய் இறப்பு விகிதம் குறைந்த நாடானது இலங்கை!

  Shanthini   | Last Modified : 28 Dec, 2017 12:12 pm


தெற்காசியாவிலேயே பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய தாய் இறப்பு விகிதம் குறைவான நாடாக இலங்கை உள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் குடும்ப சுகாதார அலுவலக அதிகாரி பிரியானி சேனாதீர மற்றும் சமூக வைத்திய நிபுணர் கபில ஜெயரத்ன, பிரசவத்தின் போதான தாய் இறப்பு குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் அளித்தனர்.

அதில், 2016ம் ஆண்டில் 112 பிரசவங்களில் தாய் மரணம் அடைந்ததாக தகவல் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு லட்சம் பிரசவத்தில், மிகக் குறைந்த அளவாக 33.8 மரணங்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதன்படி, தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரசவத்தின் போது தாய் மரணங்கள் குறித்து சுகாதாரத்துறை தெரிவிக்கையில், கடந்த 7 வருடங்களாக இலங்கையில் பிரசவத்தின் போது, தாய்மரண வீதம் தொடர்ந்து ஒரே நிலையில் நீடிக்கிறது. பிரசவத்தின் போது, தாய் மரணங்களை குறைக்க வேண்டிய வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. இதேவேளை, 43 வீதமான மரணங்கள் சரியான நேரத்திற்கு மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்ளாமையால் ஏற்பட்டுள்ளது. 20 மரணங்கள் குடும்பத்தினரின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளது. அத்துடன், சுகாதார பணியாளர்களின் தாமதங்கள் 44 மரணங்கள் ஏற்பட நேரடியான மற்றும் மறைமுக காரணங்களாக அமைந்துள்ளன. இந்த மரணங்களுக்கு முக்கிய காரணம், பிரசவத்துக்குப் பிறகான அதிக ரத்தப் போக்கு, இதய நோய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close