கல்விப் பொது தராதர உயர்தரத் தேர்வில் தமிழ் மாணவன் முதலிடம்!

  Shanthini   | Last Modified : 28 Dec, 2017 07:56 pm

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரத் தேர்வு முடிவுகளின்படி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவன் இலங்கை அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 3,15,000க்கும் மேற்பட்டவர்கள் கல்விப் பொது தராதர உயர்தரத் தேர்வு எழுதினர். இவர்களுள் 2,37,000க்கும் மேற்பட்டவர்கள் பாடசாலை மாணவர்கள் ஆவர். இந்நிலையில், தேர்வு முடிவுகள், இன்று வெளியானது, அதில் 163,104 பேர் பல்கலைகழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். 

இந்த முடிவுகளின் அடிப்படையில் பௌதீகவியல் விஞ்ஞானத்துறையில், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் திவாகரன், இலங்கை அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

வர்த்தகம் மற்றும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவுகளில் இலங்கை அளவில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவிகளான டுலந்தி ரசந்திக, டிலினி சந்துனிக்கா முதலிடத்தை பெற்றுள்ளனர். கலைப் பிரிவில் ரத்தினபுரி சதகரமலன்கர பிரிவேனாவைச் சேர்ந்த பத்பெரிய முதவன்ச தேரர் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதே வேளை இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தேர்வு விடைதாள்களை மீளாய்வு செய்ய வரும் 15ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு ஆணையாளர் சனத் பூஜித அறிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close