இலங்கை சிறைகளில் இருந்து 20 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

  Shanthini   | Last Modified : 29 Dec, 2017 12:38 pm


இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 92 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 160-க்கும் மேற்பட்ட படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 54 பேரை விடுவிக்க நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரைந்துள்ளது. இவர்களில், 37 மீனவர்களை ஊர்க்காவல் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று விடுவிக்கவும், 17 பேரை நாளை விடுவிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 20 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த 20 மீனவர்களை இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினர், இந்திய கடலோர காவல்படையின் 'அமேயா' கப்பல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close