கேப்பாபுலவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விடுவிப்பு!

  Shanthini   | Last Modified : 28 Dec, 2017 09:50 pm


முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாபுலவில் ராணுவம் ஆக்கிரமித்திருந்த 133 ஏக்கர் நிலம் மக்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் சுமித் அட்டபட்டு தெரிவித்துள்ளார்.


கேப்பாப்புலவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 300 நாட்களுக்கு மேலாக மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போர் முடிவுற்ற பின், மீள்குடியேற்றத்துறை அமைச்சகத்தினால் பொது மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் இன்னும் நூற்றுக்கணக்கான மக்களின் நிலங்களை ராணுவமே ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மக்கள் இழந்துள்ளனர்.


கேப்பாப்புலவில் மக்களின் நிலங்களை விடுவிப்பது குறித்து பல கட்டப்பேச்சுவார்த்தைகள் ராணுவத்துடன் இடம்பெற்றது. இதில் தமக்கான மாற்று இடங்கள் அமைப்பதற்கு நிதி வழங்கப்பட்டதும் இந்த நிலங்களில் இருந்து வெளியேறுவதாக ராணுவம் அறிவித்தது.

இந்நிலையில் 85 குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ராணுவத்தினரினால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று பிரிகேடியர் சுமித் அட்டபட்டு தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close