இலங்கையில் இருந்து 69 தமிழக மீனவர்கள் விடுதலை

  Shanthini   | Last Modified : 29 Dec, 2017 01:26 pm


இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த 69 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன. 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். 

நேற்று முன்தினம் சிறைகளில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு, நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் சிறைகளில் அடைத்து வைத்திருந்த 69 தமிழக மீனவர்களை விடுவிக்க அம்மாவட்ட நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவின் படி, விடுவிக்கப்பட்ட மீனவர்களை தமிழ் நாட்டுக்கு திருப்பியனுப்ப யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக 89 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 71 மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close