உள்ளுராட்சி தேர்தல் - யாழ்ப்பாணத்தில் தேர்தல் விதி மீறல்கள் பதிவு

  Shanthini   | Last Modified : 29 Dec, 2017 09:35 pm


உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் கூறியுள்ளார். 

2018 பிப்ரவரியில் இலங்கையில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் செய்துள்ளனர். மேலும் தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டரை வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டுவந்த இந்த தேர்தல், ஒரு பொதுத் தேர்தலுக்குரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதே நேரம் தேர்தல் முறைகேடு புகார்களும் பதிவாகி வருகின்றது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறித்து புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேருக்கு மேல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 தேர்தல் புகார் நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close