மக்கள் என்னை விட்டு போக மாட்டார்கள்! மகிந்த நம்பிக்கை

  Shanthini   | Last Modified : 30 Dec, 2017 04:24 am


எதிர்க்கட்சியின் அரசியல் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும் மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சே கூறியுள்ளார். 

மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் சோமவீர சந்திரசிறி, தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அவர் மகிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் செயற்பட்ட முக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த, "தலைவர்கள் சலுகைகளை எதிர்பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும், மக்கள் ஒரு போதும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டார்கள். பொருட்களின் விலைகள் வானளவு உயர்வடைந்துள்ளது, மக்கள் வாழ்வதற்கு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close