வடமாகாணத்தில் பரவிவரும் காய்ச்சல் - அச்சம் கொள்ளத்தேவையில்லை!

  Shanthini   | Last Modified : 31 Dec, 2017 11:50 am


வடமாகாணத்தில் பரவி வரும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார சேவை அதிகாரி அனில் யாசிங்க தெரிவித்துள்ளார். 

வடமாகாணம், முல்லைத்தீவு மாவட்டத்தில் மர்மக்காய்ச்சல் காரணமாக 9க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 50 முதல் 70 வயதுடையவர்கள் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது குழந்தைகளையும் இந்த காச்சல் பாதித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, சுகாதார சேவை அதிகாரி அனில் யாசிங்க, இந்தக் காய்ச்சல் ஒரு தொற்று நோய் அல்ல. உயிரிழந்தவர்கள் வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. எனவே காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார். முன்னதாக இந்த காய்ச்சலின் தாக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் அதிகாரி கே.கஜன் தெரிவித்திருந்தார்.

வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவை அதிகாரி க.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close