ஜனாதிபதியிடம் மத்திய வங்கி மோசடி விசாரணை அறிக்கை!

  Shanthini   | Last Modified : 31 Dec, 2017 07:54 pm


இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற  மோசடிகள்  குறித்த  ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  வழங்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு  பிப்ரவரி  முதல் 2016ம் ஆண்டு மார்ச்  31ம்  தேதி வரை, இலங்கை மத்திய வங்கியில் மோசடிகள் நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி விசாரணை ஆணையக்குழு நியமிக்கப்பட்டது. 

இந்த விசாரணை ஆணைக்குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசிம், பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தது.

அத்துடன், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், பெர்பசுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் எலோசியஸ் மற்றும் அதன் உயர் அதிகாரிகளிடமும்  விசாரணைகள் நடத்தப்பட்டது. அரசு, தனியார் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் அதிகாரிகளும்  இந்த மோசடிகள் குறித்து சாட்சியளித்திருந்தது.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி குறித்த விசாரணை அறிக்கையை  ஜனாதிபதி ஆணைக்குழு,   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  வழங்கியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close