விவசாயிகளுக்காக 250 கோடி ஒதுக்கீடு!

  Shanthini   | Last Modified : 31 Dec, 2017 08:55 pm


விவசாயிகள் உரம் வாங்குவதற்கு நிதி வழங்கும் பொருட்டு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் விவசாயிகளுக்கு உரம் வாங்குவதற்கான நிதி சரியாக வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து விவசாயிகளின் இந்த பிரச்சனையை சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, 'விவசாயிகளுக்கான உரத்தை பெற்றுக்கொள்ள 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இந்தத்தொகை செலுத்தப்படும். மேலும் விவசாயிகள் விண்ணப்பித்த பின்னும் நிதி கிடைக்கவில்லை எனில் நிதித்துறை அமைச்சகத்தை தொடர்புகொள்ளலாம். மேலும், இலங்கையின் இந்த விவசாய பிரச்சனை குறித்து பாகிஸ்தான் பிரதமரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்த போது, 40,000 மெட்ரிக் டன் உரம் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்' என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close