இன்று முதல் பிச்சை எடுக்கத் தடை

  Shanthini   | Last Modified : 01 Jan, 2018 12:34 pm


இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று முதல் எவரும் பிச்சை எடுக்க கூடாதென   அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர் முழுவதும் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு பிச்சை எடுப்பவர்களின் பலர் முகவர் ஒருவரின் கீழ் செயற்படுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளைப் பயன்படுத்தி பிச்சை எடுக்கப்படுவதாகவும் மாநகர மற்றும் மேல் மாகாண வளர்ச்சித்திட்ட அமைச்சகம் கூறியுள்ளது. 

மேலும் பராமரிப்பற்று கைவிடப்பட்டவர்களும் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொழும்பில் வறுமையினால் பிச்சை எடுப்பவர்கள், 600 பேர் மட்டும் உள்ளனர் என்று மாநகர மற்றும் மேல் மாகாண வளர்ச்சித்திட்ட அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் அஞ்சலி தேவராஜ் தெரிவித்துள்ளார்.

எனவே, இவர்களைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சகம் முன்னெடுத்து வருவதாகவும் சட்டவிரோதமாக பிச்சை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close