ஒரு துண்டு நிலம் கூட விடுவிக்கப்படவில்லை! - சிறிதரன் எம்.பி குற்றச்சாட்டு

  Shanthini   | Last Modified : 01 Jan, 2018 01:46 pm


கிளிநொச்சி மாவட்டத்தில்ரா ணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள  1515.07 ஏக்கர் நிலங்களில் ஒரு துண்டு பகுதி கூட விடுவிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பின், மக்களுக்குச் சொந்த மான நிலங்களை ஆக்கிரமித்து ராணுவத்தினர் தமது முகாம்களை அமைத்து உள்ளனர். இந்நிலையில் தமது நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதில் வடக்கின் சில பகுதிகளில் மக்களின் நிலங்களை ராணுவத்தினர் விடுவித்துள்ளனர்.

கிளிநொச்சியில்,பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை உடனடியாக விடுவிப்பதாக, படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அவை இன்னும் விடுவிக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், “கிளிநொச்சி - இரணைதீவை விடுவிக்கக்கோரி, அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களுடைய காணிகளை இன்னமும் அரசாங்கம் விடுவிப்பதற்கு தயாராகவில்லை. 

கிளிநொச்சி மாவட்டத்தில் ராணுவத்தினரிடம் உள்ள 1515.07 எக்கர் காணியை மக்களிடம் மீள வழங்குவற்கு படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். எனினும், இதுவரை ஒரு துண்டு காணி கூட கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களிடம் வழங்கப்படவில்லை“ என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close