இலங்கை ஜனாதிபதியின் புது வருட வாழ்த்து செய்தி!

  Shanthini   | Last Modified : 01 Jan, 2018 01:45 pm


“எமக்கு எண்ணற்ற சாதகமான பலன்களை பெற்றுத்தந்த வருடமாகவே கடந்த வருடத்தைக் கருதலாம்“ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள புதுவருட வாழ்த்து செய்தியில்,

“இலங்கை நீர்வள செயற்திட்டத்தின் பிரம்மாண்டமான சாதனையை மக்கள் மயப்படுத்தும் தேசத்தின் வளர்ச்சி செயற்பாட்டின் ஆரம்பத்தை அடித்தளமாகக் கொண்டே இந்த புத்தாண்டு மலர்கின்றது.

 2018ம் ஆண்டில் அடைய வேண்டியிருப்பதில், பொருளாதார வளர்ச்சி, பலமாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய சமூக நல்லிணக்கம், மனித சுதந்திரம் ஆகியன முதலிடத்தில் உள்ளது. மலரும் புதிய வருடத்தை கோலாகலமான ஆரம்பமாக அமைத்துக்கொள்ள வேண்டுமாயின் அதனை எமது உறுதிப்பாட்டினாலும் அர்ப்பணிப்பினாலுமே சாதிக்க முடியும்.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மங்களகரமான நீரைக் கொண்டு, வளமான தேசத்தை உருவாக்கும் எண்ணிலடங்கா எதிர்கால எதிர்பார்ப்புக்கள் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஒரு ரம்மியமான பொழுதினில் மலரும் இந்த புத்தாண்டு, இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் சகல நன்மைகளும் ஆரோக்கியமும் கிட்டும் புத்தாண்டாக அமைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்“ என்று கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close