ஈழத் தமிழர் விவகாரத்தில் தலையிடுக... டிரம்புக்கு கோரிக்கை

  Shanthini   | Last Modified : 02 Jan, 2018 06:26 pm


இலங்கையில் உள்ள தமிழர்களுக்க நீதி கிடைத்திட அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரம்ப்புக்கான தமிழர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு, டிரம்ப்புக்கான தமிழர்கள் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், 

இங்கிலாந்திடமிருந்து இலங்கை விடுதலைப் பெற்ற பின் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எந்த சிங்களவரும் தண்டிக்கப்படவில்லை. 2018ம் ஆண்டிலாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தெற்கு சூடானில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சரியாகவும் தைரியமாகவும் அமெரிக்கா செயல்பட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் விஷயத்திலும் அமெரிக்கா செய்யப்பட வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என நம்புகின்றோம்.

145,000 மேற்பட்ட தமிழர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அதிகாரிகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச போர்க்குற்ற தீர்ப்பாயம் வழியாக தண்டனை பெற்றுக்கொடுக்க டிரம்ப் உதவ வேண்டும்" என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close