இளைஞர்கள் கடத்தல் வழக்கு... மற்றொரு தளபதியை கைது செய்ய உத்தரவு!

  Shanthini   | Last Modified : 03 Jan, 2018 12:46 pm


இலங்கையில், தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் கடற்படை முன்னாள் பேச்சாளர் கமாண்டர் டீ.கே.பி தசநாயக்காவின் நீதிமன்றக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது. லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சியை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு கொழும்பில் வைத்து 11 தமிழ் இளைஞர்கள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டனர். அவர்கள் அதன்பிறகு என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. காணாமல் போனவர்கள் பட்டியலில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவிவைச் சேர்ந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோ டீ.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளை  கைது செய்தனர். 

மற்றொரு ராணுவ தளபதியான, லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சியை ஆஜராகும்படி நீதிமன்றம் பல முறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதுவரையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், ஹெட்டியாராச்சியை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது. தசநாயக்க உள்ளிட்டோரை ஜனவரி 16ம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close