இலங்கை உள்ளுராட்சித் தேர்தல் தீவிரம்... தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரேமசந்திரன்

  Shanthini   | Last Modified : 03 Jan, 2018 05:38 pm


நடைபெற உள்ள உள்ளுராட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இரண்டு ஆண்டுகளாக தள்ளிவைக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெற உள்ளது. தேர்தல் அறிவித்த நாளில் இருந்து தமிழ் அரசியல் கூட்டணி கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கூட்டமைப்பில் இருந்து வெளியேறி உள்ளது. 

இந்நிலையில், ஆனந்­த ­சங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடுதலை முன்­னணி (ஈ.பி­.ஆர்­.எல்.எஃப்), ஜன­நா­யக தமி­ழ­ர­சுக் ­கட்சி, தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு ஆகியன ஒன்று சேர்ந்துள்ளன. இவர்கள், உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் போட்­டி­யி­ட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் அறிமுகமும் தேர்தல் அறிக்கை வெளியீடும் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்தது. தேர்தல் அறிக்கையை, சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close