இலங்கை பிரதமர் ரணிலின் பதவிக்கு ஆபத்து?

  Shanthini   | Last Modified : 04 Jan, 2018 06:45 pm


"இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய பிரதமரை தேர்வு செய்யுங்கள்" என மகிந்த ராஜபக்சே தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய வங்கி நிதி மோசடி இலங்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிசேனா அறிவித்துள்ளார். ஆனால் இதை ஏற்க இலங்கை எதிர்க்கட்சி மறுத்தவிட்டது. பிரதமர் ரணில் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. 

இது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே கூறுகையில், "ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து பயணிப்பது, சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு அவமானம். எனவே ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தை கலைத்து புதிய அமைச்சரவையுடன் நாடாளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி முன்வர வேண்டும். ஆட்சியாளர்களினால் நடத்தப்பட்ட மிகப்பெரிய நிதி மோசடி இது" என்றார். மத்திய வங்கி நிதி மோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீது நாடாளுமன்றத்தின் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close