இலங்கையின் முதல் மேம்பாலம் திறப்பு

  Shanthini   | Last Modified : 05 Jan, 2018 04:26 pm


கொழும்பு ராஜகிரிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அலங்கார மேம்பாலத்தை வருகிற 8ம் தேதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைக்கிறார்.

கொழும்பின் ராஜகிரிய பிரதேசத்தில் நீண்ட காலமாக காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்தில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டள்ளது. ஸ்பெயின் நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து இந்த மேம்பாலத்தை அமைத்துள்ளன. 2016ம் ஆண்டு ரூ.1137.11 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த மேம்பால கட்டுமான பணி சமீபத்தில் முடிவடைந்தது. 534 மீட்டர் தூரத்துக்கு, 180 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் நான்கு வாகன ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது.

பொது மக்கள் பயன்பாட்டுக்காக இந்த மேம்பாலத்தை வருகிற 8ம் தேதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைக்கிறார். சிறிசேனாவின், தலைமைத்துவத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சி செயல்திட்டங்களுள் இது ஒரு விஷேச திட்டமாக குறிப்பிடலாம் என்று அரசு கூறியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close