இலங்கைக்கு 209 ஆம்புலன்ஸ்... இந்தியா வழங்குகிறது!

  Shanthini   | Last Modified : 05 Jan, 2018 03:16 pm


இந்தியாவின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவாக்க இந்தியா மேலும் இலங்கைக்கு நிதி உதவி அளித்துள்ளது.


கடந்த 2015ம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் செயல் படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை இலங்கையில் அமல்படுத்துவதற்கு உதவி செய்வதாக உறுதி அளித்திருந்தார்.


இந்தியப் பிரதமரின் வாக்குறுதியின் படி, இலங்கைக்கு 88 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டது. மேலும் 600 பேருக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு இலங்கையில் 'சுவசெரிய 1999' என்ற இலவச ஆம்புலன் சேவையை பிரதமர் மோடி, காணொளி காட்சி மூலம் ஆரம்பித்து வைத்தார். இந்த சேவைக்காக 50 கோடி ரூபாய் இந்திய அரசால்  ஒதுக்கப்பட்டது.  


தென் இலங்கையில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை நாடு முழுவதும் விரிவு படுத்த இலங்கை நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா ரூ.98 கோடி மதிப்பிலான 209 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்க உள்ளது. இந்த சேவையில் பணியாற்றுவதற்காக 1300 பேருக்கும் பயிற்சி அளிக்க உள்ளது. 


இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் நடுந்தது. இதில் இலங்கையின் துணை வெளியுறுவுத்துறை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மற்றும் இந்திய தூதர் தரண் ஜித் சிங் சந்து ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த விழாவின்போது பேசிய ரணில், "இரு நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்புக்கு ஆம்புலன்ஸ் சேவை சிறந்த உதாரணமாகும். இதற்காக இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close