காணாமல் ஆக்கப்பட்ட எழிலன் உள்ளிட்ட 12 பேரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

  Shanthini   | Last Modified : 05 Jan, 2018 08:16 pm


இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட எழிலன் உள்ளிட்ட 12 பேர் குறித்து வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட 12 பேர் ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். ஆனால் எழிலனை தாம் கைது செய்யவில்லை என ராணுவம் அறிவித்தது.

இதையடுத்து எழிலன் உள்ளிட்ட 12 பேரும் ராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வடமாகாண அமைச்சரும் எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற விசாரணையில் மனுதாரர்கள் ஆஜராகியிருந்த போதிலும் எதிர்த்தரப்பினர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close