கொழும்புவில் புதிய சொர்க்க தீவு... சுற்றுலா பயணிகளை கவர திட்டம்!

  Shanthini   | Last Modified : 05 Jan, 2018 06:38 pm


இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்த பொரலஸ்கமுவ ஏரியை சொர்க்க பூமியாக மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள பொரலஸ்கமுவ ஏரி கடந்த 10 அண்டுகளுக்கு மேல் சுத்தம் செய்யப்படாமல் இருந்து வந்தது. ஆகாயத்தாமரை ஏரி முழுவதும் பரவி வளர்ந்துள்ளது. இதனால் ஏரிப் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் எவரும் செல்வதில்லை. 


இந்நிலையில், ஏரியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை நகர வளர்ச்சி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. இதற்காக ரூ.175 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சுத்தம் செய்யும் பணி 30 நாட்களுக்குள் முழுமையாக நிறைவடைந்து விடும் என்றும் கூறப்படுகின்றது.


இந்த ஏரிப் பகுதியில் நடைப்பயிற்சி இடம் ஒன்று 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது என்றும் ஏரியை சுத்தம் செய்த பின்னர், அதன் மத்தியில் தீவு போன்ற இடம் அமைக்கப்பட உள்ளது எனவும் நகர வளர்ச்சி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிறு சொர்க்காபுரி போல பொரலஸ்கமுவ ஏரி பகுதி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close