இலங்கையின் வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்துக்கு ஜப்பான் உதவும்!

  Shanthini   | Last Modified : 05 Jan, 2018 09:52 pm


ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் தாரா கோனோ இரு நாள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். 

15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர், இலங்கைக்கு பயணம் செய்திருப்பது இதுவே முதல் முறை. இவரது பயணத்தின் போது, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், இன்று .இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் தாரா கோனோ இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் தாரா கோனோ, இருநாடுகளுக்கும் இடையில் சிறந்த வர்த்தக உறவு காணப்படுகின்றது. இலங்கையில் முதலீடுகள் செய்வது குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க ஜப்பானில் இருந்து குழு ஒன்று வரவுள்ளது. மேலும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சித்திட்டங்களுக்கு ஜப்பான் முழுமையான ஆதரவை வழங்கும் என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close