தமிழ் மக்களின் விருப்பங்களில் மண்ணை போடமாட்டோம்!

  Shanthini   | Last Modified : 07 Jan, 2018 05:41 pm


அரசியல் பிழைப்புக்காகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்‌ வடக்கையும் கிழக்கையும் இணைக்கப்போகிறது என்ற பிரசாரம் தவறானது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த மாதம் நடைக்கவுள்ள உள்ளூராட்சி சபைக்கக்காக தேர்தல் பிரசாரம் கூட்டம், மட்டக்களப்பு நிந்தவூர் பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் நிந்தவூர் பிரதேசத்தில் சபையில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றிய போது,

“சமகாலத்தில் நடக்கமுடியாத ஒரு விடயத்துக்காக தமிழர்களின் விருப்பங்களில் மண்ணை அள்ளிப்போட வேண்டிய தேவை முஸ்லிம் கட்சிக்கு இல்லை. வடக்கையும், கிழக்கை இணைப்பதற்கான ரகசிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். 

எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முஸ்ஸிம் காங்கிரஸ் பகிரங்கமாக எந்த கருத்துக்களையும் தெரிவிக்க போவதில்லை" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close