கின்னஸ் சாதனை 4 வயது எழுத்தாளர்!

  Shanthini   | Last Modified : 07 Jan, 2018 09:09 pm


உலகில் இளம் எழுத்தாளர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ள சிறுவன் தனுவக்க சேரசிங்கவை இலங்கை ஜனாதிபதி கவுரவித்துள்ளார்.

 ''Junk Food'' என்ற ஆங்கில புத்தகத்தை 3 நாட்களில்  சிறுவன் தனுவக்க சேரசிங்க எழுதியுள்ளார். அவருக்கு புத்தகம் எழுதும் போது 4 வயது என கூறப்படுகின்றது.

இந்நிலையில், சிறுவனின் திறமையை பாராட்டி விருது வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, எதிர்கால கல்வி செயல்பாடுகளுக்காக தனது ஆதரவையும் வழங்கி உள்ளார்.

சீஷெல்ஸிலுள்ள இலங்கைத் தூதுவர் டிக்கிரி ஹேரத்குணதிலக மற்றும் சிறுவனின் பெற்றோர்களான துஷித்த சேரசிங்க மற்றும் அப்சரா சேரசிங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close