இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும்! ராதாகிருஸ்ணன்

  Shanthini   | Last Modified : 07 Jan, 2018 07:36 pm


உலகத்தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டு தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என அமைச்சர் ராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் சென்னையில் உலகத்தமிழர் திருநாள் மற்றும் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்து கருத்து தெரிவித்த மலையக மக்களின் தலைவரும் அமைச்சருமான ராதாகிருஸ்ணன், "30 ஆண்டு கால போர் முடிவடைந்து தற்பொழுது அமைதி நிலவுகின்றது. எனவே உலகில் உள்ள தமிழ் வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் முதலீடுகளை செய்தால் இலங்கை தமிழர்களின் வாழ்வும் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். உலக தமிழ் வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன் வந்தால் அதற்கு ஆதரவளிக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பவர்களாக தமிழக தமிழர்கள் இருக்கின்றனர். அதே போல் உலகெங்கும் இருக்கின்ற தமிழ் வம்சாவளியினர் இலங்கைத் தமிழ் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும்," என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close