மத்திய வங்கி நிதி மோசடி விவகாரம் - நாடாளுமன்றத்தைக் கூட்ட பிரதமர் கோரிக்கை

  Shanthini   | Last Modified : 07 Jan, 2018 10:39 pm


மத்திய வங்கி நிதி மோசடி குறித்து விவாதம் நடத்த விரைவாக, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இலங்கை மத்திய வங்கியில் நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ரணில், “மத்திய வங்கி நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீது, நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என சபாநாயகரிடம் கூறியுள்ளேன். 

மத்திய வங்கி நிதி மோசடி குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் ஊடாக, நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் ஜனநாயகம் மற்றும் சட்டத்திற்கு மதிப்பளித்தல் ஆகியன மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

மத்திய வங்கி நிதி மோசடியில் ஈடுபட்டவர்களில் பிரதமர் ரணிலின் பெயரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close