முஸ்லீம்களின் வீட்டுத்திட்டத்துக்கு கூட்டமைப்பு தடை?

  Shanthini   | Last Modified : 08 Jan, 2018 03:43 pm


வடமாகாணத்தில் வாழும் முஸ்லீம் மக்களின் வீட்டுத்திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை என தெரிவித்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்வின்.

வடமாகாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு புதிய வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடைவிதித்து வருவதாக அமைச்சர் ரிஷாத் சமீபத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் அஸ்வின், "வடக்கில் 1977ம் ஆண்டுக்குப் பின்னர் அமைதியான தேர்தல் நடக்கவில்லை. யாழ்ப்பாண முஸ்லீம்களால் யாழ்ப்பாண மாநகர சபைக்கான உறுப்பினரையே தேர்வு செய்ய முடியும். யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லீம்களின் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே இருக்க வேண்டும். மேலும் முஸ்லீம்களுக்கான வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடை செய்கின்றது என்ற குற்றச்சாட்டை ஆதாரத்துடன் அமைச்சர் ரிஷாத்தால் நிரூபிக்க முடியுமா" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close