விரைந்து செயல்படுக... விக்னேஸ்வரனுக்கு ஆளுநர் அறிவுரை

  Shanthini   | Last Modified : 09 Jan, 2018 03:40 pm


வட மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டே உள்ள நிலையில், விரைந்து மக்கள் பணியாற்றிடும்படி விக்னேஸ்வரனுக்கு  ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவுரை கூறியுள்ளார்.

புது வருடத்தை வரவேற்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய ஆளுநர் குரே, "முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ளது. இந்த ஒரு வருடத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் பணிகளை நிறைவேற்ற வட மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசாங்கத்திற்கும், மாகாண சபைகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. வடமாகாணத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு கல்வி ஒன்றே தீர்வு" என்றார்.

முன்னதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த வருடத்திலாவது வடமாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close