ராஜபக்சே ஆட்சியில் நிகழ்ந்த கொலைகளுக்கு நீதி: ரணில் உறுதி!

  Shanthini   | Last Modified : 10 Jan, 2018 11:54 am


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தில் நிகழ்ந்த ஊழல் மற்றும் கொலைகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும் என்றுபிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மைத்திரிபால சிறிசேனா மற்றும் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு பதவிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 3 ஆண்டுகளில் நல்லாட்சி அரசு பெருமளவிலான ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும், நாட்டை வெளிநாடுகளுக்கு விற்று வருவதோடு மக்களின் நலனில் அக்கறை இன்றி செயல்பட்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம்சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மூன்றாண்டு நிறைவு குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நாட்டில் ஊழலை ஒழித்தல், நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பாதுகாத்தல், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற வாக்குறுதிகளை ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கியிருந்தோம். அதை முடிந்தளவு நிறைவேற்றியுள்ளோம். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே காலத்தில் நிகழ்ந்த சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை உள்ளிட்ட கொலைக்குற்றச்சாட்டுக்கள் குறித்தும், அவர் ஆட்சியில் நடந்த ஊழல்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close